sports
விராட் கோலியின் டெஸ்ட் ஓய்வு -முகமது கைஃபின் கருத்து
விராட் கோலியின் டெஸ்ட் ஓய்வு -முகமது கைஃபின் கருத்து
கோலி டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாட விரும்பியதாகவும், ஆனால் அவருக்கு பிசிசிஐ போதுமான ஆதரவு கிடைக்கவில்லை என்றும் முன்னாள் இந்திய வீரர் கைஃப் கூறியுள்ளார்.
அவர் ரஞ்சி போட்டியில் விளையாட வேண்டும் என்று கூறியபோது விளையாடினார். டெஸ்ட் போட்டிகளில் மீண்டும் வர வேண்டும் என்று அவர்நினைத்திருந்தார் எனவும் ஆனால், அவருக்கு தேவையான ஆதரவை பிசிசிஐவழங்கவில்லை எனவும் தெரிவித்தார்.
சமீபத்தில் நடந்த பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரில் அவசரத்தில் விக்கெட்டை இழந்தார்.
கடந்த சில ஆண்டுகளாக அவர் ஃபார்மில் இல்லை என்பது உண்மைதான். ஆனால், 36 வயதிலும் நல்ல உடற்தகுதியுடன் இருக்கும் கோலி முன்பு போல மீண்டும் வந்திருக்கலாம். இளம் வீரர்களுக்கு அவர் வழிகாட்டியாக இருந்தார்.
விராட் கோலி 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 46.85 சராசரியுடன் 9,230 ரன்கள் எடுத்துள்ளார்.
அவர் தனது வீடியோக்களில் டெஸ்ட் கிரிக்கெட்டைத்தான் தனக்குப் பிடித்தமான ஃபார்மேட் என்று குறிப்பிடுவார். ஆனால், தற்போது அவர் எடுத்திருப்பது அவரது தனிப்பட்ட முடிவு.
சமீபத்தில் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது அவரது ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இங்கிலாந்துக்குச் செல்லும் இந்திய அணியில் அவர் இடம்பெறுவாரா என்ற கேள்வி எழுந்த நிலையில் அவரது ஓய்வு அறிவிப்பு வந்தது.
முகமது கைஃபின் இந்த கருத்துக்கள், விராட் கோலியின் ஓய்வு குறித்து புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. .
india
கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு இன்று 44-வது பிறந்தநாள்!
கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு இன்று 44-வது பிறந்தநாள்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், ரசிகர்களால் ‘தல’ என அன்புடன் அழைக்கப்படுபவருமான மகேந்திர சிங் தோனி, இன்று தனது 44-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இந்தப் பிறந்தநாள் கொண்டாட்ட வேளையில், 2018-ஆம் ஆண்டு நடந்த ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு குறித்துப் பேசப்பட்டு வருகிறது.
ஒரு விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்ற தோனியிடம், “உங்களது முதல் காதலியின் பெயர் என்ன?” என்று மேஜிக் மேன் ஒருவர் புதிரான முறையில் யூகிக்குமாறு கேட்டார். எப்போதும் தனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பொதுவெளியில் அதிகம் பகிர்ந்துகொள்ளாத தோனி, இந்தப் புதிருக்குப் பதிலளித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். முடிவில், “அவள் பெயர் ஸ்வேதா” எனக் கூறி தனது முதல் காதலியின் பெயரை வெளிப்படையாகத் தெரிவித்தார்.
தனது தனிப்பட்ட வாழ்க்கையை அதிகம் வெளியில் காட்டிக்கொள்ளாத தோனி, இவ்வாறு ஒரு விளம்பர நிகழ்வில் வெளிப்படையாகப் பேசியது அப்போது பெரும் கவனத்தைப் பெற்றது. இன்றும், அவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது, ரசிகர்கள் அவரது கிரிக்கெட் சாதனைகளுடன் சேர்த்து, இந்தப் புதிரான தனிப்பட்ட வாழ்க்கை அத்தியாயத்தையும் நினைவுகூர்ந்து வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
அடுத்து, நாட்டின் பாதுகாப்புத் துறையில் ஒரு புரட்சிகரமான செய்தி! இந்தியக் கடற்படையில் முதல் பெண் போர் விமானி: சப்-லெப்டினன்ட் ஆஸ்தா புனியா புதிய வரலாறு படைத்தார்!
இந்தியப் பாதுகாப்புத் துறையில் பெண்களின் பங்களிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியக் கடற்படையில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது. சப்-லெப்டினன்ட் ஆஸ்தா புனியா, இந்தியக் கடற்படையின் முதல் பெண் போர் விமானி என்ற வரலாற்றுச் சிறப்புமிக்கச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
கடற்படை விமானப் பிரிவின் மிகக் கடுமையான பயிற்சிகளை வெற்றிகரமாக முடித்து, அவர் இந்தப் பெருமைக்குரிய இடத்தைப் பிடித்துள்ளார். இந்தப் பயிற்சி நிறைவில், சப்-லெப்டினன்ட் ஆஸ்தா புனியாவுக்கு ‘தங்கச் சிறகுகள்’ (Golden Wings) என்ற உயரிய விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இது அவரது அசாத்தியத் துணிச்சலுக்கும், அற்பணிப்புக்கும் கிடைத்த அங்கீகாரமாகும்.
முன்னர், இந்தியக் கடற்படை விமானப் பிரிவில் பெண் அதிகாரிகள் கண்காணிப்பாளர்களாகவும் (Observers), வான் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களாகவும் (Air Traffic Controllers) மட்டுமே பணியாற்றி வந்தனர். ஆனால், சப்-லெப்டினன்ட் ஆஸ்தா புனியா போர் விமானியாகப் பொறுப்பேற்றதன் மூலம், போர் விமானங்களைக் கையாளும் மிக முக்கியப் பொறுப்பிலும் பெண்களுக்கு வழி திறந்துள்ளது. இது, பாதுகாப்புப் படைகளில் பெண்களுக்கு மேலும் அதிகாரமளிப்பதற்கான கடற்படையின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாகக் கருதப்படுகிறது. ஆஸ்தா புனியாவின் இந்தச் சாதனை, இளம் பெண்களுக்கு ஒரு புதிய உத்வேகத்தையும், கனவுகளைத் துரத்தும் துணிச்சலையும் தரும் என்பதில் சந்தேகமில்லை.
india
ஃப்ரீஸ்டைல் சதுரங்கத்தில் உலக நம்பர் 1 – மேக்னஸ் கார்ல்சன்
india
‘ஹால் ஆப் பேம்’ பட்டியலில் இடம்பெற்றார் எம்.எஸ் தோனி!
‘ஹால் ஆப் பேம்’ பட்டியலில் இடம்பெற்றார் எம்.எஸ் தோனி!
ஐசிசி-ன் Hall of Fame பட்டியலில் எம்.எஸ்.தோனி இடம்பெற்றார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் கிரிக்கெட்டில் சிறந்து விளங்குவோரை மதிப்புமிக்க ஹால் ஆஃப் ஃபேம் (Hall of Fame) பட்டியலில் கௌரவிக்கப்படும்.
புதிதாக 7 வீரர்களை சேர்த்து ஐசிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி இடம்பெற்றுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் முன்னாள் தொடக்க வீரர் மேத்யூ ஹைடன், சவுத் ஆப்பிரிக்காவின் ஹாசிம் ஆம்லா, கிரேம் ஸ்மித் மற்றும் நியூசிலாந்தின் டேனியல் வெட்டோரி ஆகியோரும் சேர்கப்பட்டுள்ளனர். அதனுடன், பாகிஸ்தான் வீராங்கனை சனா மிர் மற்றும் இங்கிலாந்தின் சாரா டெய்லர் ஆகியோரும் இந்த பட்டியலில் இணைந்துள்ளனர்.
பாகிஸ்தான் வீரர் சனா மிர் பெற்றுள்ளார். பிஷன்சிங் பெடி, கவாஸ்கர், கபில்தேவ், கும்ப்ளே , ராகுல் டிராவிட் உள்ளிட்டோர் ஏற்கனவே இந்திய வீரர்களாக இந்த கெளரவத்தை பெற்றுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் (BCCI) எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
“தோனி 2007 ஐசிசி உலக டி20 வென்ற கேப்டன், 2011இல் ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை வென்ற கேப்டன், 2013 இல் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வென்ற கேப்டன் ஆவார்.
2009ஆம் ஆண்டு ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்தியாவை முதல் இடத்திற்கு அழைத்துச் சென்றவர்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்டதற்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு வாழ்த்துக்கள். புகழ்பெற்றவர்களின் பட்டியலில் இணையும் 11வது இந்திய கிரிக்கெட் வீரர் தோனி ஆவார்”
-
india1 year agoராஜீவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி
-
Employment1 year agoதமிழ்நாடு மின்சார வாரியத்தில் 500 பணியிடங்கள்
-
cinema1 year ago“இந்தியன் 2”: நீண்ட பயணம் முடிந்து திரையரங்குகளுக்கு வருகிறது!
-
Uncategorized1 year ago
Hello world!
-
tamilnadu1 year agoStaff Selection Commission (SSC) – MTS 8326 பணியிடங்கள் 2024
-
cinema1 year agoஇந்தியன் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
-
india12 months agoமெட்டா (Meta) நிறுவனத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி அபராதம்!
-
india1 year agoஜப்பானில் கட்டாயம் சிரிக்க சட்டம்
