Connect with us

religion

திருப்பரங்குன்றம் கோவிலில் மகா கும்பாபிஷேகம்

Published

on

திருப்பரங்குன்றம் கோவிலில் மகா கும்பாபிஷேகம்

திருப்பரங்குன்றம் கோவிலில் மகா கும்பாபிஷேகம்

 

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடத்த அறங்காவலர் குழு தீர்மானித்துள்ளது.

இதற்காக ரூ.2.44 கோடி செலவில் 20 வகையான திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

ராஜகோபுரம், வல்லபகணபதி கோவில், பசுபதி ஈஸ்வரர் உள்ளிட்ட உப கோவில்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 10-ந்தேதி பாலாலயம் நடைபெற்றது. தொடர்ந்து, பிப்ரவரி 24-ந்தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டது.

கோவிலுக்குள் உள்ள மண்டபங்களிலும் வர்ணம் பூசும் பணி நடந்து வருகிறது.

கோவிலின் பிரதான கருவறையில் கடந்த ஏப்ரல் மாதம் 9-ந்தேதி பாலாலயம் நடத்தப்பட்டு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கும்பாபிஷேகத்திற்கான தேங்காய் தொடும் முகூர்த்தம் நிகழ்ச்சி கோவில் அலுவலகத்தில் நடைபெற்றது.

மே 23-ந்தேதி காலை 8 மணி முதல் 9 மணிக்குள் முகூர்த்தக்கால் நடப்படுகிறது.

ஜூலை மாதம் 14-ந்தேதி அதிகாலை 5.25 மணி முதல் 6.10 மணிக்குள் ராஜ கோபுரத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

கும்பாபிஷேகத்திற்காக ஜூலை 10-ந்தேதி யாகசாலை பூஜை தொடங்குகிறது. தொடர்ந்து 11, 12, 13 ஆகிய 3 நாட்களும் இரு வேளையிலும் யாகசாலை பூஜை நடைபெறும்

இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் தீவிரமாக செய்து வருகின்றனர்.

india

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் குடமுழுக்கு பெருவிழா கோலாகலம்!

Published

on

By

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் குடமுழுக்கு பெருவிழா கோலாகலம்!

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் குடமுழுக்கு பெருவிழா கோலாகலம்!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதன்மையானதும், மிகவும் பழமையானதுமான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், நீண்ட நாட்களுக்குப் பிறகு நடைபெற்ற குடமுழுக்கு விழா (கும்பாபிஷேகம்) மிகுந்த கோலாகலத்துடனும், பக்திப் பரவசத்துடனும் நடைபெற்றது.

இந்த நிகழ்வு தமிழகம் மட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள முருக பக்தர்களிடையே பெரும் மகிழ்ச்சியையும், ஆன்மீக எழுச்சியையும் ஏற்படுத்தியது.

பல ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த நிகழ்வு, கோயிலின் கோபுரங்கள், விமானங்கள், மூலவர் சன்னதி மற்றும் பரிவார தெய்வங்களின் சன்னதிகள் ஆகியவற்றின் கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க நடத்தப்படும்.

யாகசாலை பூஜைகள், கலச ஸ்தாபனம், ஹோமங்கள், வேத பாராயணங்கள் எனப் பல நாட்கள் தொடர்ந்து ஆன்மீகச் சடங்குகள் நடைபெற்றன.

பக்தர்கள் வசதிக்காக சிறப்புப் பேருந்து வசதிகள், குடிநீர் வசதிகள், மருத்துவ முகாம்கள் போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் பெருமளவிலான காவல்துறையினர் குவிக்கப்பட்டு, பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.

குடமுழுக்கைத் தொடர்ந்து, அடுத்த 48 நாட்களுக்கு மண்டல பூஜைகள் நடைபெறும்.

Continue Reading

india

நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா தேரோட்டம்-தயார்படுத்தும் பணிகள் தீவிரம்!

Published

on

By

நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா தேரோட்டம்-தயார்படுத்தும் பணிகள் தீவிரம்!

நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா தேரோட்டம்-தயார்படுத்தும் பணிகள் தீவிரம்!

தென் தமிழகத்தின் மிக முக்கியமான ஆன்மீக மையங்களில் ஒன்றான திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலில், ஆண்டுதோறும் நடைபெறும் ஆனிப் பெருந்திருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்தத் திருவிழாவின் முக்கிய சிகர நிகழ்வான தேரோட்டத்தை முன்னிட்டு, கோயில் ரத வீதிகள் தற்போது முழுவீச்சில் தயார்படுத்தப்பட்டு வருகின்றன.

கோயில் தேர்களை இழுப்பதற்காக, திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலைச் சுற்றியுள்ள நான்கு ரத வீதிகளிலும் தற்போது பாதுகாப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. தேர் தங்கு தடையின்றி எளிதாகச் செல்வதற்காக, ரத வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அனைத்தும் முழுமையாக அகற்றப்பட்டுள்ளன. மேலும், இந்தப் பகுதிகளில் புதிய தார் சாலைகள் அமைக்கப்பட்டு, வீதிகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.

ரத வீதிகள் முழுவதும் சுகாதாரம் பேணப்படும் வகையில் பீச்சிங் பவுடர் தூவி முழுமையாகச் சுத்தப்படுத்தப்பட்டு, தூய்மைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இது தவிர, தேரோட்டத்தைக் காண வரும் பக்தர்களின் வசதிக்காகவும், முக்கியப் பிரமுகர்களுக்காகவும், தெற்கு கோபுரத்திற்கு எதிரே ஒரு பிரமாண்டமான உயர் மேடை அமைக்கப்பட்டுள்ளது.

தேரோட்ட நிகழ்வை முன்னிட்டு, நெல்லையப்பர் கோயிலைச் சுற்றியுள்ள ரத வீதிகளில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் பாதுகாப்பகத் தேரோட்டத்தைக் கண்டுகளிக்கும் வகையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நெல்லையப்பர் கோயில் தேரோட்டம் என்பது லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ளும் ஒரு பிரம்மாண்ட நிகழ்வாகும். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும், காவல்துறையும் இணைந்து மேற்கொண்டு வருகின்றன. இந்தப் பணிகள் அனைத்தும் நிறைவுற்று, தேரோட்டம் இனிதே நடைபெற பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

Continue Reading

india

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜூலை 7 உள்ளூர் விடுமுறை!

Published

on

By

தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஜூலை 7 உள்ளூர் விடுமுறை!

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜூலை 7  உள்ளூர் விடுமுறை!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் குடமுழுக்கு நன்னீராட்டு விழா ஜூலை 7, 2025 அன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இந்த விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறைக்கு ஈடாக, ஜூலை 19, 2025 அன்று (மூன்றாம் சனிக்கிழமை) ஒரு வேலை நாளாக செயல்படும் என மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அறிவித்துள்ளார்.

ஜூலை 7 அன்று அரசுத் தேர்வுகள் ஏதேனும் இருந்தால், சம்பந்தப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது.

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் வட்டத்தில் உள்ள சிறியமலை அருள்மிகு யோக ஆஞ்சநேய சுவாமி திருக்கோயிலின் (அருள்மிகு லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோவிலின் உபகோயில்) குடமுழுக்கு விழா ஜூலை 7, 2025 அன்று நடைபெறுகிறது.

திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக தமிழக அரசு சிறப்புப் பேருந்துகள் மற்றும் ரயில்களை அறிவித்துள்ளது.

சோளிங்கர் ஆஞ்சநேயர் கோயில் குடமுழுக்கு விழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

Continue Reading

Trending