Connect with us

tamilnadu

அம்மா உணவகங்களை மேம்படுத்த ரூ.21 கோடி ஒதுக்கீடு

Published

on

அம்மா உணவகங்களை மேம்படுத்த ரூ.21 கோடி ஒதுக்கீடு

  • இன்று தேனாம்பேட்டை அருகே உள்ள அம்மா உணவகத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பார்வையிட்டார்.
  • அப்போது அவர் பேசும் போது அம்மா உணவகங்களை புதுபிக்கும் வண்ணம் ருபாய் 21 கோடியில் நிதி ஒதுக்கீடு செய்து தமிழகத்தில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களும் மேம்படுத்தப்படும் என அறிவித்தார்.
  • அம்மா உணவகம் என்பது 2013 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்களால்  தொடங்கப்பட்டது.
  •  பின்னர் அம்மா உணவகம் தமிழகம் முழுவதும்  விரிவுபடுத்தப்பட்டது.
  • ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கும், சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கு விற்கப்படுகின்றது
  • நலிவடைந்த மக்களின் பசியை போக்க அம்மா உணவகம் முக்கிய பங்கு வகிக்கிறது.
  • தற்போது வரை தமிழ்நாட்டில் 1,300 க்கும் மேற்பட்ட அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.

india

விழுப்புரத்தில் பெஞ்சல் புயல் மழை வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Published

on

By

விழுப்புரத்தில் பெஞ்சல் புயல், மழை வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ‘ஃபெஞ்சல்’ புயல் 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் நேற்று மாலை கரையை கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் புயலாக வலுபெற்றது.

கனமழை முதல் அதிக கன மழை வரை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மணிக்கு 50 முதல் 90 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

ஃபெஞ்சல் புயல் 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் தற்போது வேகமெடுத்துள்ளது.

புதுச்சேரிக்கு கிழக்கே 150 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 140 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

மரக்காணம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களிடம் அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரண முகாமில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

Continue Reading

india

சென்னை அருகே நிலைகொண்டுள்ள பெஞ்சல் புயல்!

Published

on

By

சென்னை அருகே நிலைகொண்டுள்ள பெஞ்சல் புயல்!

சென்னை அருகே நிலைகொண்டுள்ள பெஞ்சல் புயல்!

பெஞ்சல் புயல் சென்னையிலிருந்து 90கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது.

வங்கக் கடலில் உருவாகி உள்ள ஃபெஞ்சல் புயல் 100 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது.

10 கி.மீ வேகத்தில் புயல் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது.

புதுச்சேரி – மகாபலிபுரம் இடையே கரையை கடக்கிறது.

புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு மேற்கொண்டார்.

Continue Reading

india

இன்றைய சமையல் : பாரம்பரிய சம்பா பச்சரிசி பாயாசம்

Published

on

By

சம்பா பச்சரிசி பாயாசம்

இன்றைய சமையல் : பாரம்பரிய சம்பா பச்சரிசி பாயாசம்

சம்பா பச்சரிசி பாயாசம் செய்முறை
தேவையான பொருட்கள்:

  1. சம்பா பச்சரிசி – 1 கப்
  2. பால் – 3 கப்
  3. வெல்லம் – 1 கப்
  4. ஏலக்காய் பொடி – 1/2 தேக்கரண்டி
  5. முந்திரி, பாதாம் – சிறிதளவு
  6. உலர் திராட்சை – சிறிதளவு
  7. நெய் – 1 தேக்கரண்டி

செய்முறை:

  • சம்பா பச்சரிசியை நன்றாகக் கழுவி, 2-3 மணி நேரம் ஊற வைக்கவும்.
  • ஒரு பாத்திரத்தில் பால் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
  • ஊற வைத்த பச்சரிசியை பாலில் சேர்த்து, மிதமான தீயில் வேக வைக்கவும்.
  • பச்சரிசி நன்றாக வெந்த பிறகு, வெல்லம் சேர்த்து கரைக்கவும்.
  • ஏலக்காய் பொடி சேர்த்து கிளறவும்.
  • நெய்யில் முந்திரி, பாதாம், உலர் திராட்சை வறுத்து, பாயசத்தில் சேர்க்கவும்.
  • பாயசம் கொதித்து வந்ததும், அடுப்பை அணைத்து விடவும்.
  • சூடாக அல்லது குளிராக பரிமாறவும்.
Continue Reading

Trending