religion
ஆடி வரும் கள்ளழகர் : ஆடி தேரோட்டம்
ஆடி வரும் கள்ளழகர் ஆடி தேரோட்டம்
- மதுரை மாவட்டத்தில் அழகர்மலை அடிவாரத்தில் திருமாலிருஞ்சோலை தென்திருப்பதி என்று புகழப்படும் கள்ளழகர் கோவில் அமைந்துள்ளது.
- 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தினந்தோறும் பல்வேறு அலங்காரங்களில் சுவாமியும் அம்பாளும் வீதி உலா வந்தனர்.
- விழாவின் இறுதி நாளான இன்று தேரோட்டம் நடைபெற்றது.
- காலை 7 மணிக்கு தொடங்கிய தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.
- இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
- இதனால் மதுரை மாநகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டது.
- 18-ம்படி கருப்பணசாமி சன்னதியில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பவுர்ணமியன்று மாலையில் கதவுகள் திறக்கப்பட்டு 18 படிகளுக்கும் படி பூஜை செய்வது வழக்கம் இந்நிகழ்வும் இன்று நடைபெறுவது தனி சிறப்பு.
india
கார்த்திகை தீபத்திருவிழா – மலையேற அனுமதி மறுப்பு – அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு !
கார்த்திகை தீபத்திருவிழா – மலையேற அனுமதி மறுப்பு – அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு !
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்தன்று பக்தர்களுக்கு மலையேற அனுமதி இல்லை என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
திருவண்ணமலை வரும் பக்தர்கள் மகாதீபம் ஏற்றப்படும்போது மலை மீது ஏற அனுமதி கிடையாது என்றார்.
மண்சரிவை தொடர்ந்து புவியியல், ஆணையாளர் உள்ளிட்ட 8 பேர் கொண்ட குழு ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் உரிய அறிவிப்பை வெளியிடுவார்.
பரணி தீபத்தை காண 6,300 பேருக்கும் மகாதீபத்தை காண 11,600 பேருக்கும் அனுமதி தரும் பணி நடைபெற்று வருகிறது என்று கூறினார்.
கொப்பரை, நெய் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் செல்ல தேவையான ஆட்கள் மட்டுமே மலைமீது செல்ல அனுமதிக்கப்படுவர் என தெரிவித்துள்ளார்.
cinema
புஷ்பா 2 இரண்டே நாட்களில் ரூ.400 கோடியை தாண்டிய வசூல்!
புஷ்பா 2 இரண்டே நாட்களில் ரூ.400 கோடியை தாண்டிய வசூல்!
புஷ்பா 2′ திரைப்படம் வெளியாகி இரண்டு நாட்களில் உலகளவில் ரூ.400 கோடியை தாண்டி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியாகி வசூல் படைத்தது.
இப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் செம்மரக் கடத்தல் காரனாக நடித்திருந்தார்.
ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார்.
மலையாள நடிகர் பகத் ஃபாசில் வில்லனாக நடித்திருந்தார்.
இரண்டாம் பாகம் சுமார் ரூ.350 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகியது.
மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது.
தொடர்ந்து புஷ்பா 2 திரைப்படம் நேற்று பான் இந்தியா அளவில் பிரம்மாண்டமாக ரிலீஸானது.
3 மணிநேரம் 21 நிமிடம் ஓடக்கூடிய அளவு மிகப்பெரிய ரன்னிங் டைம் கொண்டுள்ளது.
முதல் பாதி 1 மணிநேரம் 40 நிமிடமும், இரண்டாம் பாதி 1 மணிநேரம் 41 நிமிடமும் ஓடும் என கூறப்படுகிறது.
திரைப்படம் வெளியான இரண்டே நாட்களில் உலகளவில் ரூ.400 கோடியை தாண்டி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் மட்டும் ரூ.265 கோடி வசூலை குவித்திருப்பதாக தகவல்.
india
பாபர் மசூதி இடிப்பு தினம் – நெல்லையில் கடையடைப்பு போராட்டம்!
பாபர் மசூதி இடிப்பு தினம் – நெல்லையில் கடையடைப்பு போராட்டம்!
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி நெல்லையில் இஸ்லாமியர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .
பாபர் மசூதி 1992 ஆம் ஆண்டு இடிக்கபட்டதில் இருந்து ஆண்டுதோறும் இஸ்லாமியர்கள் அந்த நாளை கருப்பு தினமாக அனுசரிக்கின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் மேலப்பாளையத்தில் அணைத்து அரசியல் இயக்கங்கள் வணிகர் சங்கங்கள் ஜமாத் சார்பில் ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.
வி எஸ் டி சாலை, கொட்டிக்குளம் சாலை, பஜார் திடல், நேதாஜி சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இயங்கும் சுமார் 1500 க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.
சுமார் 300-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் 100க்கும் மேற்பட்ட வாடகை வேன் மற்றும் கார்களும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இயக்கப்படாததால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது .
நெல்லை மாநகர காவல் ஆணையாளர் உத்தரவின்படி 1000 திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் .
-
Employment5 months ago
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 500 பணியிடங்கள்
-
Uncategorized6 months ago
Hello world!
-
cinema5 months ago
இந்தியன் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
-
cinema5 months ago
“இந்தியன் 2”: நீண்ட பயணம் முடிந்து திரையரங்குகளுக்கு வருகிறது!
-
tamilnadu5 months ago
Staff Selection Commission (SSC) – MTS 8326 பணியிடங்கள் 2024
-
india4 weeks ago
மெட்டா (Meta) நிறுவனத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி அபராதம்!
-
india5 months ago
அண்டிலியா வீடு: பிரம்மாண்டமான திருமண அலங்காரம்
-
india5 months ago
ஜப்பானில் கட்டாயம் சிரிக்க சட்டம்