Connect with us

Employment

இரயில்வேயில் போலி வேலைவாய்ப்பு வதந்திகள் 

Published

on

இரயில்வேயில் போலி வேலைவாய்ப்பு வதந்திகள்

  • கடந்த சில நாட்களாக தெற்கு  இரயில்வேயில் சில வேலைவாய்ப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அதில் விண்ணப்பம் செய்ய ஒரு லிங்க் கிளிக் செய்யவும் சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி வேகமாக பரவி வருகிறது.
  • அதற்கு  தெற்கு இரயில்வே சென்னை மண்டல மேலாளர் அவர்கை பொதுமக்கள் கவனத்திற்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
  • அதில் இரயில்வே போலி வேலைவாய்ப்புகள் குறித்து வரும் வதந்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம்.
  • உண்மை வேலைவாய்ப்புகள் Railway Recruitment Board மூலம் மட்டுமே ஆட்சேர்ப்பு நடைபெறும்.
  • வேலைகளை வழங்க யவரேனும் பணம் கேட்டும் எஜெண்டுகளை நம்பவேண்டாம் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

Employment

அரசு காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்காதது ஏன் உயர் நீதிமன்றம் கேள்வி!

Published

on

By

அரசு காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்காதது ஏன் உயர் நீதிமன்றம் கேள்வி!

அரசு காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்காதது ஏன் உயர் நீதிமன்றம் கேள்வி!

அரசு துறைகளில் காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்காதது ஏன் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சுருக்கெழுத்தர், தட்டச்சர், உதவியாளர்கள், கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தமிழ் நாளிதழில் செய்தி வெளியானது.

சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

நுகர்வோர் நீதிமன்றங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எடுக்கப்பட்ட இந்த வழக்கு, தலைமை நீதிபதி ஶ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

32 மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்களில், அனுமதிக்கப்பட்ட சுருக்கெழுத்து தட்டச்சர், இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர் 230 பணியிடங்களில், 11 இளநிலை உதவியாளர்கள், இரண்டு சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்கள் என 13 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அறிக்கையில் விளக்கமளிக்கப்பட்டது.

காலியிடங்களை நிரப்ப கூடுதல் அறிக்கை தாக்கல் செய்ய ஏதுவாக விசாரணையை ஜனவரி 23 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Continue Reading

cinema

அஜித்தின் விடாமுயற்சியில் புதிய திருப்பம்: ஹாலிவுட் நிறுவனம் 150 கோடி இழப்பீடு கோரி நோட்டீஸ்

Published

on

By

A new twist in Ajith's perseverance: Hollywood company issues notice demanding Rs 150 crore compensation

அஜித்குமாரின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘விடாமுயற்சி’ படம் முடிவடைவதற்கு நெருங்கி வருவதால் ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் வெளியான டீஸர் அதன் கவர்ச்சிகரமான காட்சிகள் மற்றும் தீவிரமான தொனியுடன் மிகுந்த நேர்மறையான வரவேற்பைப் பெற்றது, படத்திற்கான எதிர்பார்ப்புகளை மேலும் அதிகரித்தது. இருப்பினும், பாராட்டுகளுடன், டீஸர் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது, 1997 ஆம் ஆண்டு வெளியான ‘பிரேக் டவுன்’ என்ற ஹாலிவுட் திரைப்படத்துடன் ஒப்பிட்டு, படத்தின் மீது திருட்டு நகல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

வலைப்பேச்சு யூடியூப் சேனலின் கூற்றுப்படி, ‘பிரேக் டவுன்’ படத்தின் உரிமையை வைத்திருக்கும் ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனம், ‘விடாமுயற்சி’ படம் அதன் கதையை அதிகளவில் நகலெடுத்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது. ‘பிரேக் டவுன்’ படம், தங்கள் கார் தொலைதூர இடத்தில் பழுதடைந்த பிறகு, தனது காணாமல் போன மனைவியைத் தேடும் ஒரு கணவரின் கதையை விவரிக்கிறது, ஒரு மர்மமான நிகழ்வுகளின் சங்கிலியை வெளிப்படுத்துகிறது. தயாரிப்பு நிறுவனம் ‘விடாமுயற்சி’ படம் அசலுடன் குறிப்பிடத்தக்க ஒற்றுமையைக் கொண்டுள்ளதாகக் கூறி, அறிவுசார் சொத்து மீறலுக்காக ரூ. 150 கோடி இழப்பீடு கோரியுள்ளது.

இந்த குற்றச்சாட்டுகள் திரைப்படத் துறையிலும் ரசிகர்களிடையிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன, ஆனால் ‘விடாமுயற்சி’ படத்தின் தயாரிப்பாளர்கள் இதுவரை அதிகாரப்பூர்வமான பதிலை வெளியிடவில்லை. மகிழ் திருமேனி இயக்கத்தில், அஜித்குமார், திரிஷா, அர்ஜுன் சர்ஜா, ரெஜினா காஸாண்டிரா மற்றும் ஆரவ் ஆகியோர் நடித்துள்ளனர், இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் படத்தின் இசையை கையாண்டுள்ளார்.

சர்ச்சையின் போதிலும், ‘விடாமுயற்சி’ படத்தின் தயாரிப்பு முன்னேறி வருகிறது, மேலும் படம் பொங்கல் 2025 இல் பிரமாண்ட திரையரங்க வெளியீட்டிற்கு திட்டமிடப்பட்டுள்ளது. திருட்டு நகல் குற்றச்சாட்டு ஒரு புதிய திருப்பத்தை சேர்த்திருந்தாலும், இது பொதுமக்களின் ஆர்வத்தையும் அதிகரித்துள்ளது, ‘விடாமுயற்சி’ சமீபத்திய காலங்களில் அதிகம் பேசப்படும் தமிழ் படங்களில் ஒன்றாக மாறியுள்ளது. ரசிகர்கள் இந்த விவகாரம் குறித்த தெளிவு மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர்களிடமிருந்து மேலும் தகவல்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Continue Reading

Employment

தமிழகத்தை தாக்குமா? ஃபெங்கால் புயல்!

Published

on

By

உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி!

தமிழகத்தை தாக்குமா? ஃபெங்கால் புயல்!

நாளை உருவாக உள்ள புயலுக்கு ஃபெங்கால் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் 10 கி.மீ வேகத்தில் தமிழக கடற்கரை நோக்கி நகர்ந்து வருகிறது.

சுமார் 630 கி.மீ தொலைவில் தாழ்வு மண்டலம் அமைந்துள்ளது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறுகிறது.

புயல் அடுத்த 2 நாட்களில் தமிழக – இலங்கை கடற்கரை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை,காஞ்சிபுரம் , விழுப்புரம், சென்னை, புதுச்சேரி, காரைக்காலில் கனமழை பெய்து வருகிறது.

அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாகை, கடலூர், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Continue Reading

Trending