Connect with us

religion

ஆடி கிருத்திகை முருகன் கோவில்களில் அலைமோதும் கூட்டம்

Published

on

ஆடி கிருத்திகை முருகன் கோவில்களில் அலைமோதும் கூட்டம்

கார்த்திகை நட்சத்திரம் தமிழ் மாதமான ஆடியில் வரும் கார்த்திகை நட்சத்திர நாள் முருகனுக்கு வெகு விசேசமான நாளாககும்.

சமஸ்கிருதத்தில் கிருத்திகை எனவும் தமிழில் கார்த்திகை நட்சத்திரம் எனவும் கருதுவர்.

கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர் முருகன் என கருதுவதால்
கார்த்திகை நட்சத்திரம் தை மாதம் மற்றும் ஆடி மாதம் கார்த்திகை நட்சத்திரங்கள் முருகனுக்கு சிறப்பு வாய்தந்ததாக கருதப்படுகிறது.

இன்றைய தினம் அருகில் உள்ள முருகன் வழிபாட்டு தலங்களுக்கு சென்று முருகனை தரிசிக்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

இன்று காலை முதல் முருகனின் அறுபடை வீடுகளில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
அதிலும் குறிப்பாக திருச்செந்தூரில் காலை சிறப்பு தரிசனம் முதல்  மக்கள் பலர் விரதம் இருந்து வழிபட கோவிலில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

india

கார்த்திகை தீபத்திருவிழா – மலையேற அனுமதி மறுப்பு – அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு !

Published

on

By

கார்த்திகை தீபத்திருவிழா

கார்த்திகை தீபத்திருவிழா – மலையேற அனுமதி மறுப்பு – அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு !

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்தன்று பக்தர்களுக்கு மலையேற அனுமதி இல்லை என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

திருவண்ணமலை வரும் பக்தர்கள் மகாதீபம் ஏற்றப்படும்போது மலை மீது ஏற அனுமதி கிடையாது என்றார்.

மண்சரிவை தொடர்ந்து புவியியல், ஆணையாளர் உள்ளிட்ட 8 பேர் கொண்ட குழு ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் உரிய அறிவிப்பை வெளியிடுவார்.

பரணி தீபத்தை காண 6,300 பேருக்கும் மகாதீபத்தை காண 11,600 பேருக்கும் அனுமதி தரும் பணி நடைபெற்று வருகிறது என்று கூறினார்.

கொப்பரை, நெய் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் செல்ல தேவையான ஆட்கள் மட்டுமே மலைமீது செல்ல அனுமதிக்கப்படுவர் என தெரிவித்துள்ளார்.

Continue Reading

cinema

புஷ்பா 2 இரண்டே நாட்களில் ரூ.400 கோடியை தாண்டிய வசூல்!

Published

on

By

புஷ்பா 2 இரண்டே நாட்களில் ரூ.400 கோடியை தாண்டிய வசூல்!

புஷ்பா 2 இரண்டே நாட்களில் ரூ.400 கோடியை தாண்டிய வசூல்!

புஷ்பா 2′ திரைப்படம் வெளியாகி இரண்டு நாட்களில் உலகளவில் ரூ.400 கோடியை தாண்டி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியாகி வசூல் படைத்தது.

இப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் செம்மரக் கடத்தல் காரனாக நடித்திருந்தார்.

ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார்.

மலையாள நடிகர் பகத் ஃபாசில் வில்லனாக நடித்திருந்தார்.

இரண்டாம் பாகம் சுமார் ரூ.350 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகியது.

மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது.

தொடர்ந்து புஷ்பா 2 திரைப்படம் நேற்று பான் இந்தியா அளவில் பிரம்மாண்டமாக ரிலீஸானது.

3 மணிநேரம் 21 நிமிடம் ஓடக்கூடிய அளவு மிகப்பெரிய ரன்னிங் டைம் கொண்டுள்ளது.

முதல் பாதி 1 மணிநேரம் 40 நிமிடமும், இரண்டாம் பாதி 1 மணிநேரம் 41 நிமிடமும் ஓடும் என கூறப்படுகிறது.

திரைப்படம் வெளியான இரண்டே நாட்களில் உலகளவில் ரூ.400 கோடியை தாண்டி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் மட்டும் ரூ.265 கோடி வசூலை குவித்திருப்பதாக தகவல்.

Continue Reading

india

பாபர் மசூதி இடிப்பு தினம் – நெல்லையில் கடையடைப்பு போராட்டம்!

Published

on

By

பாபர் மசூதி இடிப்பு தினம் - நெல்லையில் கடையடைப்பு போராட்டம்!

பாபர் மசூதி இடிப்பு தினம் – நெல்லையில் கடையடைப்பு போராட்டம்!

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி நெல்லையில் இஸ்லாமியர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .

பாபர் மசூதி 1992 ஆம் ஆண்டு இடிக்கபட்டதில் இருந்து ஆண்டுதோறும் இஸ்லாமியர்கள் அந்த நாளை கருப்பு தினமாக அனுசரிக்கின்றனர்.

நெல்லை மாவட்டத்தில் மேலப்பாளையத்தில் அணைத்து அரசியல் இயக்கங்கள் வணிகர் சங்கங்கள் ஜமாத் சார்பில் ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.

வி எஸ் டி சாலை, கொட்டிக்குளம் சாலை, பஜார் திடல், நேதாஜி சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இயங்கும் சுமார் 1500 க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.

சுமார் 300-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் 100க்கும் மேற்பட்ட வாடகை வேன் மற்றும் கார்களும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இயக்கப்படாததால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது .

நெல்லை மாநகர காவல் ஆணையாளர் உத்தரவின்படி 1000 திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் .

Continue Reading

Trending